Monday, December 6, 2010



இந்தியாவில் கடந்த 10-15 வருடங்களாக ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியினால் பெரிய வீடுகள், அருமையான கார்கள், மேல் நாட்டு உணவு வகைகள், புதிய செல் போன்கள் இன்னும் பலவற்றை சொல்லி போகலாம். எங்கும் மாற்றம் எதிலும் மாற்றம். இது எனது தமிழ்நாட்டு நண்பர்கள் தமிழ் நாட்டுக்கு வெகேஷனில் சென்று வந்தபின் வந்து புலம்பிய புலம்பல்கள். அவர்களின் பேச்சை கேட்ட எனக்கும் தமிழ் நாட்டை ஒரு முறை சென்று பார்த்து விட்டு வரவேண்டும் என்ற அளவிட முடியாத ஆர்வம். முடிந்தால் நம் நாட்டிலே வந்து செட்டில் ஆகிவிட வேண்டும் என்ற ஒரு வேகம். அந்த அளவிடா ஆர்வத்தினால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு வந்தேன் பார்த்தேன். எனது பார்வைக்கும் எனது நண்பர்களின் பார்வைக்கும் ரொம்ப வித்தியாசம்.அவர்களின் பார்வையில் மேலே சொன்னபடி பல மாற்றங்கள். ஆனால் எனது பார்வையில் தமிழ்னாடு(இந்தியா) இன்னும் மாறாமல் தான் இருக்கின்றன....

அநேக வகையில் இன்னும் அப்படியே இருக்கின்றன இதை மிக கழுகு கண்ணால் பார்த்தவர்களுக்கு மட்டும் புரியும்.மாயை உலகில் இருப்பவர்களுக்கு இது புரிவது கடினம்

எனது பார்வையில் மாறாத தமிழ்னாடு..........

மக்களின் உணவு உடை பழக்க வழக்கங்கள் மாறியுள்ளன ஆனால் அடிப்படை குணங்கள் , சிந்தனைகள் அப்படியே பழமையாக உள்ளன.

அரசியல் சக்திகள், ஊழல்கள், கையில் பணம் இருந்தால் சட்டத்தை விலைக்கு வாங்குதல், குறுக்கு வழியில் காரியம் முடித்தல் & பணம் சம்பாதித்தல்

நடிகர்கள் பின்னால் செல்லுதல் அவர்களை கடவுளாகவும் தலைவனாகவும் கருதுதல் உண்ண ஒரு வேளை உணவு இல்லையென்ற போதும் கடன் வாங்கியாவது அவர்களுக்கு பால் அபிஷேகம் பண்ணுதல்...

வெளியிடங்களிள் உள்ள சுகாதாரம்.பஸ் ரயில் பொது பாத்ருமில் குப்பை கூலங்கள் எங்கு பார்க்கினும் முன்னைவிட கேவலமாக இருக்கின்றன.

சோம்பேறித்தனம் , லேட்னஸ் முன்னே போலவே இருக்கின்றன முக்கியமா அரசு துறைகளில்....

பார்க்கும் வேலைகளில் ஒரு வித அலட்சியம் ஒரு விதமான இன்வால்வ் இல்லாமல் வேலை பார்ப்பது..

ஏழை பணக்கார இடைவெளி மிக அதிகமாக இருப்பது. பணக்காரன் மேலும் பணக்காரனாகி கொண்டே போவது ஏழை மேலும் ஏழையாவே போவது புதிதாக ஏதும் மாற்றம் இல்லை...

பொதுவிட பழக்க வழக்கங்கள் கண்ட இடங்களில் குப்பை போடுவது எச்சில் துப்புவது , டிராபிக் ரூல்ஸை கடை பிடிக்காமல் போவது

பொது இடங்களில் பெண்களை கிண்டல் செய்வது, அவர்களை தவறான கண்ணோடத்தில் பார்ப்பது, அவர்களை கண்ட இடங்களில் தொடுவது இவைகளை தவறாக நினைக்காதது.இந்த வித பழக்கங்களில் ஒரு மாற்றமும் இல்லாதது,

பொதுவிடங்களில் அளவுக்கு அதிகமாக மியூஸிக் போடுவது , தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது போன்றவைகளில் அடிப்படை மாற்றம் இல்லாமல் இருப்பது

வெள்ளம் புயல் போன்றவைகள் வரும் போது ஒருவித முன்னேற்பாடுகள் இல்லாமல் இருப்பது

அரசியல் தலைவர்கள் எதிர்கட்சி தலைவர்களை எதிரிகளாக பார்ப்பது & அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பேசுவது...

என் பார்வையில் பட்டதில் சிலவற்றை மட்டும் இங்கே சொல்லியுள்ளேன் ஆனால் இன்னும் இது போல பலவற்றை சொல்லாம்

எனது கருத்து என்னவென்றால் பணம், கார் பங்களாவினால் மட்டும் மாற்றம் இருந்தால் போதாது அடிப்படை பழக்கவழக்கங்களிம் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதுதான். இவைகளில் மாற்றம் ஏற்படும் போது தமிழனுக்கும் தமிழ் நாட்டுக்கும் பெருமை.

இந்த பதிவை படித்து ஒரு சில பேர்களாவது மாறினால் எனக்கு சந்தோஷம்.

இந்த பதிவை படிப்பவர்களுக்கு எனது அன்பான வேண்டுகோள். நீங்கள் தெரியாதவர்களை நேருக்கு நேர் பார்க்கும் போது ஸ்மைல் பண்ண பழகுங்கள், முடிந்தவரை அடுத்தவர்களுக்கு உதவுங்கள் முடிந்தால் கனிவுடன் பேசுங்கள்.

நன்றி....எனது பார்வைக்கு மாறாக உங்களுக்கு கருத்து ஏதும் இருந்தால் அன்புடன் உங்கள் கருத்தை இங்கே பறிமாற வருமாறு அழைக்கிறேன்.

ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்



ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்

14 comments:

  1. இந்த பதிவு உங்கள் மேல் இன்னும் அதிக மரியாதை தந்துள்ளது...

    மிக ஆழமான பார்வை.. நான் என்ணிய பல விஷயங்கள் இங்கே சொல்லியிருக்கீங்க..

    பண புழக்கம் மட்டுமே ஒரு நாட்டை முன்னேற்றி விடாது நீங்கள் சொன்னவை முக்கியமானவை..

    //பொது இடங்களில் பெண்களை கிண்டல் செய்வது, அவர்களை தவறான கண்ணோடத்தில் பார்ப்பது, அவர்களை கண்ட இடங்களில் தொடுவது இவைகளை தவறாக நினைக்காதது.இந்த வித பழக்கங்களில் ஒரு மாற்றமும் இல்லாதது,//

    நிஜமாகவே அருவருப்பான விஷயம் இது.. வெளிநாட்டில் காண முடியாது..

    ReplyDelete
  2. பண புழக்கம் அதிகமானதும் பணத்தால் எல்லாத்தையும் சாதிக்க நினைத்து லஞ்சம் போன்றவை அதிகமானது..வீட்டி வாடகை கன்னா பின்னா உயர்வு...

    தேவையற்ற பொருட்களை வாங்கி பந்தாவுக்காக குமிப்பது..

    நான் இந்தியாவுக்கு குழந்தைகளை அழைத்து சென்றால் எல்லார் வீட்டிலுமே கோக் பெப்ஸி னு சர்வசாதாரண புழக்கம்.. பிஸா , பெர்கரும் கூட.. நான் அதிர்ச்சிய்டைந்தேன்..

    இங்கே அவையெல்லாவற்றுக்கும் நான் தடை சொல்வேன்.. அதே போல குழந்தைகளுக்கு இங்கே சிக்கனமாய் செலவழிக்க சொல்லிக்கொடுத்தாலும் , இந்தியாவில் உள்ளவர்கள் அதை கஞ்சத்தனமாய் பார்க்கிறார்கள்.. :)

    நிறைய மாறணும் . முக்கியமா போலித்தனம் அதிகம் ..

    ReplyDelete
  3. ஓகே...எனக்கும் நீங்க சொல்றதில் ஆதங்கம் இருந்தாலும்...அது தான் எங்க நாட்டோட icon ..ஆனால்...உங்க நாட்டை போலே லிவிங் டோகேதேர்,டேடிங்,கலாசார அத்துமீறல்கள் எல்லாம் இன்னும் ரொம்ப வரம்பு மீறி போகல...ஏதோ ஒன்னு இழுத்து பிடிச்சுட்டு இருக்கு...அதெல்லாம் விடுங்க...
    இதை மட்டும் படிங்க...
    "சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா..அது எந்நாடு என்றாலும்...அது நம் நாட்டுக்கீடாகுமா..?"

    ReplyDelete
  4. ஓகே...எனக்கும் நீங்க சொல்றதில் ஆதங்கம் இருந்தாலும்...அது தான் எங்க நாட்டோட icon ..ஆனால்...உங்க நாட்டை போலே லிவிங் டோகேதேர்,டேடிங்,கலாசார அத்துமீறல்கள் எல்லாம் இன்னும் ரொம்ப வரம்பு மீறி போகல...ஏதோ ஒன்னு இழுத்து பிடிச்சுட்டு இருக்கு...அதெல்லாம் விடுங்க...
    இதை மட்டும் படிங்க...
    "சொர்க்கமே என்றாலும் அது நம் ஊர போல வருமா..அது எந்நாடு என்றாலும்...அது நம் நாட்டுக்கீடாகுமா..?"

    ReplyDelete
  5. ஒரு சைடு மட்டும் பார்த்து தமிழ் நாடே அப்படி ஆயருசுனு முடிவு பண்ணாதிங்க..மதுரையில் இப்போ எல்லாம் கட் அவுட் கிடையாது..சென்னையில் சுவர்களில் பூராவும் அழகான சித்திரங்கள்...மீனாக்ஷி அம்மன் கோவில் சுத்தி பாருங்க..அசந்துருவிங்க..அவளவு நவீனம் ஆக்கிட்டாங்க...

    ReplyDelete
  6. நம்ம நாட்டில் மக்கள் தொகை,ஏழ்மை ஜாஸ்தி சார்...அதற்கான துயரத்தையும் அனுபவிக்கனும்..அமெரிக்காவையும்,அமிஞ்சி கரையவும் ஒரே பார்வையில் பார்கதிங்க...நன்றி...:)))

    ReplyDelete
  7. முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---முக்கியமா போலித்தனம் அதிகம் .---

    ReplyDelete
  8. ஆனந்தி சொன்னது :நம்ம நாட்டில் மக்கள் தொகை,ஏழ்மை ஜாஸ்தி சார்... அதற்கான துயரத்தையும் அனுபவிக்கனும்.
    MTG : நீங்கள் செய்திகள் பார்ப்பது அல்ல என்று தெரிகிரது. அமெரிக்காவிலும் ஏழ்மையுள்ளது. இப்போது அதிகரித்தும் உள்ளது
    அமெரிக்காவையும்,அமிஞ்சி கரையவும் ஒரே பார்வையில் பார்கதிங்க...நன்றி...:)))
    எனது ஆதங்கம் அமிஞ்சிகரையும் அமெரிக்காவாக ஆக வேண்டும் என்பது தான். நான் சொல்லவருவது சிந்தனைகளில்.
    எனது பதிவை நன்றாக படித்தீரகள் என்றால் நான் சொன்னது நன்றாக புரியும். இந்திய மக்களின் கைகளில் செல்வம் நிரைய இருக்கிறது என்ருதான் சொல்லியிருகிறேன். நான் சொல்ல வருவது எண்னங்களும் செயல்களூம்தான்

    ReplyDelete
  9. ஆனந்தி சொன்னது "உங்க நாட்டை போலே லிவிங் டோகேதேர்,டேடிங்,கலாசார அத்துமீறல்கள் எல்லாம் இன்னும் ரொம்ப வரம்பு மீறி போகல...ஏதோ ஒன்னு இழுத்து பிடிச்சுட்டு இருக்கு..."

    டேடிங்கை பற்றி சொல்லும் போது அதை கலாசார அத்துமீறல்கள் என்று கூறி இருக்கிறீர்கள் உங்களின் பார்வையில் அமெரிக்கா காலச்சாரம் தவரு என் நினைக்கிறிர்கள். அது தவரு அது அமெரிக்கரக்ளின் கலாச்சாரம் அதில் தலையிட நமக்கு உரிமையில்லை. அது போல அவர்களும் நம் கலாச்சாரம் பற்றீ பேச உரிமையில்லை.

    ஓரிஜனல் அமெரிக்கர்களீன் டேடிங்க்கும் மற்றவர்கள் கடைபிடிக்கும் டேடின்ங்கும் நிறைய வித்தியாசம் உண்டு, அதை பற்றி ஒரு பதிவே போடலாம்

    நம் நாட்டில் உள்ள நல்ல குடும்பதினரை போலவே அமெரிக்காவில் உள்ள நல்ல அமெரிக்கா குடும்பதினரும் லிவீங்க் டுகதரை ஆதரிப்பதில்லை ஆனால் அதை இந்த காலச் சுழல் அதையும் மாற்றுகிறது இது அமெரிக்காவில் மட்டும் அல்ல அனேக நாடுகளிலும் இது நடக்கிரது. சில வற்றில் காலத்தீற்கு தகுந்தால் போல எது நல்லதோ அதை அறிந்து அதற்கு தகுந்தாற் போல மாற வேண்டும்.

    முன்பு பக்கத்து வீட்டினரிடமும் உறவினரிடமும் வம்பு தும்பு பேசுவோம் ஆனால் கால மாற்ரத்திற்கு தகுந்தாற் போல நாமும் இண்டெர் நெட் மூலம் வம்பு அளக்கீறோம் அல்லவா.?

    ReplyDelete
  10. //முன்பு பக்கத்து வீட்டினரிடமும் உறவினரிடமும் வம்பு தும்பு பேசுவோம் ஆனால் கால மாற்ரத்திற்கு தகுந்தாற் போல நாமும் இண்டெர் நெட் மூலம் வம்பு அளக்கீறோம் அல்லவா.?//
    ஹலோ இது டேக்னாலோஜி ங்க...இது அறிவியல்...நான் சொல்றது கலாச்சாரம்...அது உணர்வு மட்டுமே சம்பந்தப்பட்டது...அப்போ கலாச்சாரம் இது மாதிரி முற்போக்கா போயிருசுனால் அது அத்து மீறல் தானே...லிவிங் டோகேதேர் க்கு ஆயிரம் காரணம் சாதகமாகவோ..பாதகமாகவோ சொல்ல பட்டாலும்...வருங்கால சமுதாயம் அபாயமான ஒரு நிலைக்கு போகாதவரை இருந்தால் உத்தமம்...

    ReplyDelete
  11. /சில வற்றில் காலத்தீற்கு தகுந்தால் போல எது நல்லதோ அதை அறிந்து அதற்கு தகுந்தாற் போல மாற வேண்டும்.//
    எங்க ஊரில் கல்யாணம் செய்யாமல் ஒரு பொண்ணும்,பையனும் சேர்ந்து வாழ்ந்தால் அந்த பையன் அந்த பொண்ணை வச்சுட்டு இருக்கான் தாங்க சொல்வாங்க..இதுல எதுவும் மாற்றம் வருமான்னு தெரில..:))

    ReplyDelete
  12. /எனது ஆதங்கம் அமிஞ்சிகரையும் அமெரிக்காவாக ஆக வேண்டும் என்பது தான்.//

    அதெல்லாம் நடக்கவே நடக்காதுங்க...இது வேற அமைப்பு...இது வேற சூழல்...இது வேற சமூகம்...கனவில் மட்டுமே யோசிங்க நல்லா :))))

    ReplyDelete
  13. தமிழ் நாடு - தமிழ்னாடு இல்லை

    ReplyDelete
  14. நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை. ஒத்துக் கொள்கிறேன்.
    ஆனாலும் இது நம் நாடு சார்.
    இதில் தானே படித்தோம் வளர்ந்தோம். மறுக்க முடியுமா?
    நம் கலாசாரத்திற்கு இணையாக வேறு ஒரு கலாசாரமும் இல்லை என்பதே என் கருத்தாகும்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.