Thursday, December 2, 2010

மெளனமாக ஒரு அலறல்..
அம்மா.... நான் பார்ட்டிக்குப் போயிருந்தேன்...

அம்மா நீங்கச் சொன்னதை மறக்காமல் ஞாபகம் வைத்திருந்தேன்.

அம்மா நீங்க சொன்னீங்க குடிக்கக் கூடாதென்று

அம்மா நான் கோக் மட்டும்தான் குடித்தேன்

 
அம்மா என் உள்ளத்திற்குள் ஒரு கர்வம் & பெருமை
நீங்கச் சொன்னதை அப்படியே கடைப்பிடிக்கின்றேன் என்று

அம்மா எல்லோரும் குடி குடி என்று சொன்னார்கள்


அம்மா இருந்தாலும் நான் குடித்துவிட்டுக் கார் ஒட்டவில்லை


அம்மா நான் பார்ட்டியில் சரியாகத்தான் நடந்தேன்

அம்மா உங்கள் வழிகாட்டுதல் எப்போதுமே சரியாகத்தான் இருக்கும்

அம்மா ஒரு வழியாகப் பார்ட்டி முடிந்து எல்லோரும் வெளியேறத் தொடங்கினார்கள்.

அம்மா நானும் என் காரில் வந்து உட்கார்ந்தேன் எனக்குத் தெரியும் நான் நல்ல படியாக வீடு வந்து சேர்வேன் என்று

அம்மா நீங்க என்னை ரொம்பப் பொறுப்பாகவும் இனிமையாகவும் வளர்த்தீர்கள்.



..
அம்மா நான் வாகன நிறுத்துமிடத்தில்  இருந்து மெதுவாக ரோட்டிற்குள் மெதுவாக வந்தேன்

அம்மா அப்போது இன்னொரு காரில் வந்தவன் என்னைப் பார்க்வில்லை

அம்மா அந்தக் கார் என் காரில் ஒரு பாறாங்கல்லைப் போல வந்து மோதியதும்மா

அம்மா என்ன நடந்தது என்று தெரியவில்லை நான் தரையில் கிடந்தேன் அம்மா

அம்மா அப்போது போலிஸ்காரர் பேசியது என் காதில் விழுந்தது அம்மா

அம்மா அவர் யாரிடமோ சொன்னார் அந்த வாலிபன் நல்ல குடித்துவிட்டுக் கார் ஒட்டி வந்து மோதியுள்ளான் என்று

.   



அம்மா குடித்தது அவன் ஆனால் எனக்கு ஏன் அம்மா இந்தத் தண்டனை?


அம்மா உன் ஆசை மகள் நான் தரையில் கிடக்கின்றேன்.
நீ சீக்கிரம் இங்கே வாமமா

அம்மா எப்படிமமா இது நடந்தது என் வாழ்க்கை பார்ட்டியில் உள்ள ஒரு பலூனை போல ஒரு நொடியில் உடைந்துவிட்டதேயம்மா

அம்மா இங்கே எங்க பார்த்தாலும் ஒரே ரத்தமயம்தானம்மா எல்லாம் இரத்தமும் உன் செல்லப் பிள்ளையினுடையது தானம்மா

ஆம்புலன்சில் வந்தவர்கள் பேசிக் கொள்கிறார்கள் நான் சீக்கிரம் இறந்து விடுவேன் என்று



அம்மா நான் உன்னிடம் ஒன்று மீண்டும் சொல்ல விரும்புகிறேன் சத்தியாமா நான் குடிக்கவில்லை

அம்மா மற்றவர்கள்தான் குடித்தார்கள் அந்தப் பார்ட்டியில்

அம்மா ஒன்று மட்டும் வித்தியாசம் குடித்து அவர்கள் ஆனால் இறப்பது நான் அம்மா

 
silentdeath2


அம்மா இவர்கள் ஏனம்மா குடிக்கிறார்கள் இது அவர்கள் வாழ்க்கையை மட்டுமில்லாமல்

மற்றவர்கள் வாழ்க்கையையும் அழித்துவிடுமம்மா

அம்மா ரொம்ப வலிக்குதம்மா சில நொடியில் கத்தியை எடுத்து மெதுவாக அறுப்பது போலவும் சில நொடியில் பாறாங்கல்லை மேலே தூக்கிப்போட்டது போலவும் வலிக்குதம்மா...

ஆனால் குடித்து விட்டு என் மேல் மோதியவனுக்கோ சிறு அடி கூட இல்லையம்மா.அவன் வைத்த கண் மாறாமல் என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் அம்மா.



அம்மா இது நியாமில்லை அம்மா நியாமில்லை.......



அம்மா தம்பியை அழ வேண்டாம் என்று சொல்லும்மா

அம்மா என் செல்ல அப்பாவை தைரியமாக இருக்கச் சொல்லம்மா

அம்மா நீதான் அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும்





என் சாமாதியில் "டாடியின் பெண் இங்கே உறங்குகிறாள் "என்று போடும்மா

அம்மா உன்னைப் போல யாரவது அவனுக்கு எடுத்துச் சொல்லி வளர்த்திருந்தால்

இப்போது நானும் உயிரோட இருந்திருப்பேன் அம்மா.

அம்மா எனக்கு இப்போது பயமா இருக்கும்மா. என்னால முச்சுவிடமுடியலையம்மா

அம்மா எனக்காக அழாதேம்மா உனக்கு நான் எப்போது தேவையோ அப்போது உன் அருகில் இருப்பேனம்மா?

அம்மா நான் இறக்கும் முன் உன்னிடம் கடைசியாக ஒரு கேள்வியம்மா....

நான் குடிச்சிட்டுக் கார் ஓட்டவில்லை ஆனால் நான் ஏனம்மா இப்போது சாகனும்?
மௌனமாக ஒரு அலறல்..


-----

இன்றைய இளைஞர்கள் நள்ளிரவுகளில் அளவுக்கு அதிகமாகக் குடித்து விட்டு அவர்களே காரை ஓட்டி சென்று விபத்திற்கு உள்ளாவதை நாம் தினசரிகளில் படிக்கிறோம். அந்தமாதிரியுள்ள இளைஞர்கள் இளம் சகோதரிகள் குடிப்பதற்கு முன்னால் ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள். நான் உங்களைக் குடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் அதிகமாகக் குடித்து விட்டு விடிகாலையில் கார்களை ஒட்டி செல்ல வேண்டாம் என்றுதான் கேட்டுக் கொள்கிறேன். உங்களின் லிமிட் என்னவென்று தெரிந்து விட்டு அந்த அளவு குடியுங்கள் நண்பர்கள் சொல்லுவதற்காக அதிக அளவு குடிக்காதீர்கள்.

இழப்பு என்பது இழந்தவர்களூக்குதான் புரியும். நீங்கள் இறப்பதினால் உங்களுக்குப் பெரிய இழப்ப ஏதுமில்லை வாழ வேண்டிய ஆண்டுகளைத்தான் இழக்கிறீர்கள். ஆனால் உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கு உங்களின் இழப்பு ஒரு பெரிய இழப்பு.உங்களால் அடைந்த சந்தோஷங்களையும் அவர்கள் இழக்கிறார்கள்

ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்கள் மனசுலப்பட்ட கருத்தைத்தான் சொல்லிவிட்டு போங்களேன்
அன்புடன்
மதுரைத்தமிழன்


http://avargal-unmaigal.blogspot.com
பேஸ்புக் : https://www.facebook.com/avargal.unmaigal
டுவிட்டர் : https://twitter.com/maduraitamilguy
இமெயில் : avargal_unmaigal@yahoo.com

8 comments:

  1. :(

    சோகம்தான்.
    மத்தவங்களுக்காகவும் சில பழ்க்கங்களை விடணும்தான்.

    ReplyDelete
  2. படிச்சுட்டு ரொம்பவே கஷ்டமா இருந்தது...உங்கள் எழுத்து நடை மூலம் அழுகையையும் வரவச்சுட்டிங்க:((.லிமிட் ஆ குடியோ,லிமிட் இல்லாத குடியோ...அந்த கருமமே எதுக்கு தொடணும்...)

    ReplyDelete
  3. அம்மாக்கு பொண்ணு தன் சோகத்தை விவரிக்கிற மாதிரி இருந்த presentation தான் இதுல ரொம்பவே என்னை கவர்ந்த விஷயம்...நல்லா இருக்குங்க...

    ReplyDelete
  4. Hello Friend,
    I read almost all your articles in your blog.
    Please remove those scary pics.
    Because we come to read at all times and in this world which is a mixture of all, I request you to keep the article as is... but please remove those scary pics...and tearful pics.
    I know a picture speaks thounsands words. But, remove those scary pics.
    And once again... I am a fan of all your articles..as you cover almost all parts of life

    Thanks,
    Your Friend

    ReplyDelete
  5. seyyadha thavarukku dhandanai anubhavikkum ovvoru aanmaavum kadharum kadharal ippadi thaanae irukkum,ethanai kanavugal ,ethanai edhir paarpugal,ethanai kadamaigal sumandhu irundhu iruppangalo . indha news eh common places like bus stand,hospitals,hotels pondra idangalil notice maadhiri otti vaikalam....manasu valikkudhu

    ReplyDelete
  6. உணர்வுகளின் ஆழத்தைத் தொட்ட பதிவு. இதை நான் இப்போதுதான் படிக்கிறேன். கண்ணீரை வரவழைத்தீர்கள். குடிப்பவர்களை வரையறை அறிந்து குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருக்கிறீர்கள். குடிப்பழக்கம் என்பது அதற்கு அடிமைப்படும் எண்ணத்தை (Addiction) விதைக்கக்கூடியது. அதை உபயோகிப்பவர்கள் உறுதியான மனநிலை உள்ளவர்களாக இருந்தால் மட்டுமே அடிமைப்படக்கூடிய வாய்ப்பினைத் தவிற்க இயலும். அப்படிப்பட்ட உறுதி உள்ளவர்கள் குடிப்பதையே தவிர்த்து விடுவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நமது அறிவுரை தேவைப்படாது. விளையாட்டாகக் குடிக்க ஆரம்பிப்பவர்களே ஒரு தருணத்தில் அதற்கு அடிமைப்பட்டு விடுகிறார்கள். எனவே நாம் கூடுமானவரை குடிப்பது ஒரு விளையாட்டு (ஜாலி) என்கின்ற எண்ணத்தை விதைக்காமல் இருப்பது நல்லது. எனவே தான் குடிப்பது கேடு என்கின்ற பரப்புரையை செய்கிறோம். மதுரைத்தமிழனுக்கு வரைமுறை அறிந்து மது உபயோகிக்கும் திறமை இருக்கலாம். ஆனால் உங்கள் எழுத்துக்களில் அவ்வப்போது குடிப்பதில் உள்ள “ஜாலி” பற்றி ஒரு தொனி இருக்கும். தமாஷாகவே இருந்தாலும் வீக்கான மனம் உள்ளவர்களை அது தவறாகவே வழிநடத்தும் என்பது என்னுடைய கருத்து. கோபித்துக்கொள்ளாதீர்கள். நாம் யாருக்கும் இடறலாக இருந்துவிடக்கூடாது. பெரும்பாலோனோர் இந்த விஷயத்தில் பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள் என்பது என்னுடைய பார்வை. இந்த வகையில் நான் ஒருமுறை உங்கள் பதிவிற்குப் பின்னுட்டம் இட்டதை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு உங்களை நான் தவறாகப்புரிந்து இருக்கிறேன் என பதில் கொடுத்தீர்கள். நானும் என்னுடைய எண்ணத்தினை சரிவர வெளிப்படுத்தவில்லையோ என்னும் ஐயத்தில் அதை அப்படியே விட்டுவிட்டேன். மற்றபடி நான் உங்கள் எழுத்தின் ரசிகன். என்னைப் போன்றே பல ரசிகர்கள் உங்கள் எழுத்திற்கு இருக்கிறார்கள் என்பது உங்கள் தளத்திற்கு வந்து பார்த்தாலே தெரியும். எனவே உங்கள் எழுத்து பலவீனமான மனம் உள்ள இளைஞர்களுக்கு ஒரு இடறலாக அமைந்து விடக்கூடாது என்பதே என் கவலை. அதனால் குடியின் ஜாலி பற்றி குறிப்பிடுவதைத் தவிர்க்கவும். உங்களுக்கு ஆலோசனை கூறும் தகுதி இல்லாவிடினும் வயது இருக்கிறது என்கின்ற நம்பிக்கையில் இதனைச் சொல்லுகிறேன். தவறு எனில் கண்டுகொள்ள வேண்டாம்.

    ReplyDelete
  7. குடிக்கு எதிரான பதிவு! கலங்க வைத்தது! ஒரு சிலரை திருந்தவும் வைக்கும்! இத்தனை நாள் இதை படிக்காமல் விட்டதை நினைத்து வருந்துகிறேன்! அருமையான பதிவு!

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.