Sunday, November 28, 2010

இரண்டு கார்கள் மோதி ஒரு பயங்கரமான கார் ஆக்ஸிடெண்ட். கார்களில் இருந்த ஒரு வாலிபனும் ஒர் வாலிப பெண்ணும், எந்த ஒரு பெரிய காயங்கள் இன்றி காரில் இருந்து தப்பி, கஷ்டப்பட்டு தவழ்ந்து வெளியே வந்தனர்.கார்களுக்குகோ பயங்கர சேதாரம் ஆனால் அவர்களுக்கோ ஓன்றும் பெரிய அடி காயங்கள் ஏதும் இல்லை பெறும் வியப்பு கலந்த சந்தோஷம் இருவருக்கும்.


அந்த வாலிபனிடம் பெண் சொன்னாள் பாருங்க நம்ம கார்கள் எந்த அளவுக்கு அடையாளம் தெரியாமல் நொறுங்கி போகிறுக்கிறது ஆனால் என்ன ஆச்சிரியம் பாருங்க நமக்கு ஒன்னும் ஆகவில்லை. நான் நினக்கிறேன் இது ஒரு கடவுளின் வழிகாட்டுதல் (sign) & ஆசிர்வாதம் நமக்கு .எனவே நாம் நல்ல நண்பர்களாக முடிந்தால் வாழ் நாள் முழுவதும் சேர்ந்து வாழ்வோம். நீங்கள் இதை பற்றி என்ன நினைக்கிறிர்கள் என்று கேட்டாள்.



அதற்கு அவன் பதில் சொன்னான். நான் நீங்கள் சொல்வதை 100% ஒத்துக் கொள்கிறேன். இது கடவுளிடம் வந்த சைன்(sign) தான் என்று ஒத்துக்கொண்டான்.



தன் காரை சுற்றி பார்த்த பெண் அதில் இருந்த அவள் ஷாப்பிங் பேக்கை வெளியே இழுத்து பார்த்தாள் அதில் இருந்த வைன் பாட்டில் உடையாமல் இருந்ததை பார்த்து சந்தோஷம் கொண்ட அவள், அவனை பார்த்து சொன்னாள். இங்க பாருங்க மீண்டும் என்ன அதிசயம் காரோ இந்த அளவு டேமேஜ் ஆகி இருக்கிறது ஆனால் இந்த வைன்(wine) பாட்டில் சிறிது கூட உடையாமல் இருக்கிறது . இதுவும் கடவுளின் ஒரு சைன் தான் நமக்கு. நாம் உயிர் பிழைத்து எதிர்காலத்தில் நாம் நல்ல படியாக சேர்ந்து வாழ வேண்டும் என்று அதை நாம் இன்று கொண்டாட கடவுள்தான் இதை உடைக்காமல் வைத்துள்ளார்.



இந்தாங்க முதலில் இதை நீங்கள் திறந்து உங்களுக்கு வேண்டிய அளவு குடித்து விட்டு சிறிய அளவில் எனக்கு தாருங்கள் என்றாள்.



நம்ம ஹீரோவும் அதை ஆமோதித்து விட்டு தாகம் வேற எடுத்ததால் முக்கால் பாட்டிலையும் காலி செய்துவிட்டு மீதியை அவளிடம் கொடுத்து குடிக்க சொன்னான்.



அதற்கு அந்த பெண் அமைதியாக பாட்டிலை வாங்க மறுத்தாள்.


ஏன் உனக்கு கொஞ்சம் கூட வேண்டாமா என்று கேட்டான்.


இல்லை போலீஸ் வந்து இந்த ஆக்ஸிடெண்டை விசாரித்து விட்டு போகும் வரை குடிக்க வேண்டாம் அது வரை காத்திருக்கலாம் என்று நினைக்கிறேன் என்று வெகு ஸ்மார்ட்டாக பதில் சொன்னாள்.


இன்னும் ஒரு கதை..........



ஒரு பெண் துணிக்கடைக்கு வந்து துணிகளை பார்வையிட்டு இந்த துணி மீட்டர் என்ன விலை என்று சேல்ஸ் மேனை பார்த்து கேட்டாள்.

அதற்கு அந்த குறும்புகார சேல்ஸ்மேன் மீட்டருக்கு ஒரு முத்தம்தான் என்று சொன்னான்.

அதற்கு அந்த பெண்ணும் சம்மதித்துவிட்டு ஒரு 20 மீட்டர் தாருங்கள் என்று சொன்னாள்

அந்த சேல்ஸ்மேனுக்கோ ரொம்ப ஆச்சிரியம் இருந்தாலும் அதை கட்டுபடுத்தி துணியை கட் பண்ணி அழகாக மடித்து அவளிடம் தந்தான்.

அதை வாங்கிய அந்த ஸ்மார்ட் பொண்ணு... தள்ளி நின்று இருந்த அவள் தாத்தாவை கூப்பிட்டு தாத்தாதான் பில்லுக்கு எப்பவும் பணம் தருவார் அவரிடம் வாங்கி கொள்ளுங்கள் என்று கண்டித்தாவாறு நடையை கட்டினாள்


பெண்கள் = ஸ்மார்ட்(Smart) . ஆண்கள் = நம்புதல் ( Trusting)





ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன்

4 comments:

  1. இப்பவவது ஒத்துகிட்டீங்களே.. உங்க பெருந்தன்மைக்கு நன்றிங்க..

    :)

    ReplyDelete
  2. சூரியனை கைகளால் மறைக்க முடியாது அது போல சில உண்மைகளையும் வெகுகாலம் மறைத்து வைக்கமுடியாது.

    ReplyDelete
  3. ஆண்கள் ஸ்மார்ட் ன்னு சொல்லும்போது சிலநேரம் பெண்கள் ஏமாந்தும் போய்றாங்க...சோ..அப்போலாம் ஆண்களும் ஸ்மார்ட்...:) ரெண்டு ஜோக்ஸ் ம் நல்லா இருந்துச்சு...:))))

    ReplyDelete
  4. ஆனந்தி மேடம் நீங்கள் ரொம்ப ஸ்மார்ட்டா பதில் சொல்லியிருக்கிறீங்க?? ஹீ...ஹீ.....ஹீ. நன்றி நீங்கள் என்னை ஸ்மார்ட்டுன்னு அறிவித்ததுக்கு.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.