Saturday, October 30, 2010


பெண்ணுக்கு வயது 27 நியூயார்க்கில் உள்ள பிரபல கம்பெனியில் சாப்ட்வேர் இஞ்சினியர் பெயர் அமுதா . பையனுக்கு வயது 30 நியூ ஜெர்ஸியில் உள்ள பிரபல கம்பெனியில் சாப்ட்வேர் இஞ்சினியர் 
பணியாற்றுகிறார் பெயர் அசோக். அமுதாவின் போன் நம்பர் அசோக்கின் அம்மாவின் மூலம் அசோக்கிற்க்கு கொடுக்கபபட்டது. அசோக்கின் அம்மா நியூஜெர்ஸியில் உள்ள பாலாஜி கோயிலுக்கு அடிக்கடி செல்வார் .அப்போது அங்கு அறிமுகமான ஒரு பெண்ணின் கணவருடைய, நண்பரின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவருடைய ப்ரதர் இன் லாவினுடைய பழைய நண்பரின் அண்ணனுடைய பெண்தான் அமுதா...(என்ன குழம்பி போயிட்டிங்களா....போங்க போய் சூடா ஒரு காப்பி சாப்பிட்டு மீண்டும் வந்து படியுங்க...ஒகேவா? )



புதன் கிழமை இரவு 8 மணி



அமுதாவின் செல் போன் மெல்லமாக சிணுங்கியது....

அமுதா : ஹலோ

அசோக் : ( ஓ..ஸிட்...அவள் போனை எடுக்க மாட்டானு நினைத்தேன்) உம்ம்ம்ம்ம் ஹாய் ஸ் திஸ் அமுதா?

அமுதா : எஸ் ஸ்பிக்கிங்
?( அடக்கடவுளே... அவளூக்கு நான் யாருனு தெரியலன்னா என்ன பண்ணுவது. லுக் லைக் ஐ ஆம் இடியட். இதுக்குதான் அம்மா பேச்சை கேட்டு முன் பின் தெரியத பெண்ணுக்கு கால் பண்ண கூடாது)


அசோக் ; என் பெயர் அசோக் . எனக்கு தெரியல நான் யாருனு உங்களுக்கு தெரியுமா என்று
அமுதா : எஸ் எனக்கு தெரியும் அம்மா சொல்லியிருக்காங்க உங்களைப்பற்றி....

அசோக் : அப்படியா? ( அவங்க அம்மா என்ன சொல்லிருப்பாங்க நம்பளை பற்றி... நல்ல உயராமான வட்ட சட்டமான , சிவப்பான, தங்கமெடல் வாங்கிய பையன்னு கதைவிட்டிருப்பாங்களோ? அப்படி சொல்லியிருந்தா இப்போவே நம்பளை வெறுத்திருப்பா? ஹும்ம்)

அமுதா : எஸ்....அம்மா சொன்னாங்க உங்களுக்கு என் போன் நம்பர் கொடுத்து இருப்பதாக?( என்னால நம்ப முடியல இவன் கால் பண்ணுவானு )

அசோக் : ஹவ் ஆர் யூ? ( இதை தவிர வேற என்ன கேட்பது? எனக்கு உன்னைத் தெரியாது .ஆனால் உனக்கு என் மனைவியாக விருப்பமா என்றா? டேம்,,,,,,,

அமுதா . நான் நலமாயிருக்கிறேன்? நீங்கள் எப்படி இருக்கிறிர்கள்? ( என்ன ஆரம்பம் இது ஷிட்டி ஆரம்பம்மா இருக்கிறதே?



அசோக் : நான் நலம். நான் கேள்விப்பட்டேன் நீங்கள் சாப்ட்வேர் இஞ்சினியர் என்று? ( ஒ .....நான் ஒரு இடியட் ஏன் இப்படி அசட்டு பிசட்டுனு பேசுறேன்)

அமுதா : ஆமாம்.

அசோக் : ( ஒகே.. இவ ஒரு வார்த்தையிலே பதில் சொல்லுகிறாள்) நீங்கள் எந்த கம்பெனியில் வேலை பார்க்கிறிர்கள்?

அமுதா : கோல்டுமென்

அசோக் : ஒ அது நல்ல கம்பெனியாச்சே!( போனை அப்படியே கட் பண்ணிடலாமுனு இருக்கு ஆனால் அம்மாவுக்கு தெரிஞ்சா கொன்னு போட்டுடுவா )

அமுதா : ஆமாம். வேலை பார்ப்பதற்கு நல்ல இடம் ( ஒ...காட் இவன் சரியான லூசரா இருப்பான் போலிருக்கே?

அசோக் : உம்ம்ம்ம்ம்ம்..

அமுதா ; ஓ நீங்களும் சாப்ட்வேர் இஞ்சினியர்தானே? ( ஆமாம் நம்ம அம்மாதான் இதுவரை சொல்லாத மாதிரி .இதுவரை 500 தடவை சொல்லியிருப்பா? ஹும்....)

அசோக் : ( ஒகே இதை நம்மலால இசியாக சமாளிக்காலாம்..) ஆமாம் நான் ப்ராஜெக்ட் மேனஜர். என் கிழே நிறைய பேர் வேலை பார்க்கிறார்கள்( உம்ம் வேற ஏதாவது பேசுடா. வேற என்ன கேட்கலாம்? நீ ட்ரிங்க்ஸ் அடிப்பியா? சிகரெட் குடிப்பியா? செக்ஸ் பிடிக்குமா? என்ன கல்யாணம் பண்ணிகிறதுனா நீ ரொம்ப ரொம் ப நல்ல சமத்து சவுத் இண்டியன் பொண்ணா இருக்க கூடாது) ப்ரீ டையத்துல நீங்க என்ண பண்ணுவீங்க?

அமுதா : ( மவனே நீ தொலஞ்சே..) நான் நண்பர்கள் கூட வெளியே போவேன், சினிமா...ஷாப்பிங்க....

அசோக் : நண்பர்கள் கூட நியூயார்க்கல எங்கெல்லாம் போவிங்க?

அமுதா : ( ஒ ஷிட்!... இவன் கோயில் குளமுனு போற அம்மாஞ்சியாக கூட இருப்பான். இவன் கிட்டப் போய் என்ன சொல்லுறது? பாருக்கு போறேன்னு சொல்லமுடியாது. சும்மா க்ளப்புக்கு போறோன்னு சொல்லி வைப்போம். ) ஒ... சில சமயங்களில் மூவி, அல்லது இங்கே சில நல்ல கிளப்புகள் உள்ளன அதற்கும் போவோம்.( வாவ் குட்...நல்ல பொய்....உண்மையிலேயே கிளப்புக்கு போக அவ்வளவா பிடிக்காது. ஆனால் இவன் அம்மாஞ்சியா இருந்தா இந்த பதிலுக்கே ஒடிவிடுவான்.

அசோக் : ( ஒகே ..இவ கிளப்புக்கு எல்லாம் போறா ...லுக் லைக் நல்ல சிக்னல், இவ ஒன்னும் பக்திமான் இல்லை. அப்படி இருந்தா இபபடி எல்லாம் கிளப்புக்கு எல்லாம் போகமாட்டா) ஓ...அப்படியா? நான் நல்ல டான்ஸ் ஆடுவேன்

அமுதா: ( வாவ்....இவன் டான்ஸுக்குகெல்லாம் போறான்...நல்ல அறிகுறிதான்.. இவன் ஒன்னும் ஒல்டு பேஷன் டைப் கிடையாது.) அப்படியா அப்ப நீங்க எப்படி டைம் பாஸ் பண்ணுவிங்க?

அசோக் : ( அப்ப சொல்லிர்லாமா? என்னதான் ஆகப்போகுது சொல்லித்தான் பார்ப்போம்) உம்ம்... சும்மா அப்படியே பார், கிளப் அது போன்ற இடத்துக்கெல்லாம் நண்பர்கள் கூட சென்று வருவேன்.


அமுதா : ( என்ன? பாருக்கெல்லாம் போவானா? அப்படின்னா தண்ணி கூட அடிப்பான்..நல்ல சிக்னல்தான்..மேலும் இவனைப்பற்றி மேலும் கொஞ்சம் தெரிஞ்சு கொள்ளலாம்) அப்படியா நல்ல பாரு எல்லாம் அங்கே இருக்கா?

அசோக் : ஆமாம். நல்ல பாரு நிறைய இருக்கு.. ஆனா நான் ரொம்ப குடிக்கிறது எல்லாம் இல்லை. டைம் பாஸ் பண்ணதான் போவேன் ( ஒ0கே நல்ல இம்ப்ரெஷன் தான். ஜாலிக்கு குடிப்பான் ஆனால் மொடா குடிகாரன் இல்லையென்று)



அமுதா : ( ரொம்ப ஒப்பனா இருக்கான். நல்லவன் மாதிரி தெரியுறான். அப்போ எதுக்கு நம்பிளை கால் பண்ணுறான். அவனுக்கு கண்டிப்பாக கேர்ள் ப்ரெண்டு இருக்கனும். அம்மா சொன்னதுக்காக இப்படி கால் பண்ணூரானு நினக்கிறேன்.அடக்கடவுளே இவன் அசிங்கமாக இருப்பானோ/ அல்லது யாரும் இவனுக்கு முத்தம் கூட கொட்க்காமல் இருந்திருப்பார்களோ?) ஆமாம் நானும் கூட அப்படித்தான் . என் பெற்றோர்கள் எப்பொழுதும் கண்டுபிடிக்காம இருக்க வேண்டுமென நம்புகிறேன்.



அசோக் : ஆமாம் நீங்க என்ன சொல்ல வரிங்க என் எனக்கு புரிகிற்து.

அமுதா : (இரட்டை வாழ்க்கை வாழுரதப்பத்தி புரிஞ்சிருக்கான். நல்ல புரியும் தன்மை இருக்கிறது. இவன் பார்க்க எப்படி இருப்பான் என்ற ஆசை வருகிறதே) அப்புறம்?





அசோக் : (ஒரு வேளை இவ ரொம்ப குண்டா இருப்பாளோ அல்லது மீசை போல முடி இருக்குமோ? ஒரே ஒரு வழிதான் இருக்கிறது இதை கண்டுபிடிக்க?)அப்புறம் அடுத்த வாரம் நியூயார்க்கில் உள்ள என் நண்பரை பார்க்க வருகிறேன் முடிந்தால் நாம் இருவரும் காபி ஷாப்பில் சந்திக்கலாமா? இது ஒரு பைத்தியகாரதனமா தோன்றுகிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினக்கிறிர்கள்



அமுதா : ( காபி ஷாப். ரொம்ப பாதுகாப்பான இடம்தான். இவன் ரொம்ப மோஷமா இருந்தால் போடனுட்டு வந்துடலாம்) ஆமாம் நல்ல ஐடியாதான்.



அசோக் :( காபி ஷாப் செலவில்லாத இடம்தான். யாருக்கு தெரியும் இவ ரொம்ப அமைதியான பொண்ணா கூட இருக்கலாம்... போதும் இந்த டெலிபோன் உரையாடல்... முதல்ல இதை இப்போ நிறுத்தலாம்.) அப்ப நான் பிளான் பண்ணிட்டு உங்களுக்கு இமெயில் அனுப்புறேன்...



அமுதா : ( போனைவிட இமெயில் நல்லது. இந்த இமெயிலை கண்டுபிடித்த கடவுளூக்குதான் முதலில் நன்றி சொல்லனும்.) ஓகே இமெயில் நல்லது. நான் வெலையில் இருக்கும் போது எப்போதும் இமெயில் பார்ப்பேன்( போனை முதலில் வையுடா இப்போ)



அசோக் : அப்ப ஒகே கூடிய சிக்கிரத்தில் இமெயில் அனுப்புறேன்( இரண்டு அல்லது மூன்று நாளில் அனுப்புவேன் என்று அர்த்தம்.. நாய் போல நாக்க தொங்கப்போட்டுட்டு அழையுறேன் என்று நினைக்க கூடாதுஅல்ல அதற்குதான் இந்த டயம்.)



அமுதா : ( நான் நினைக்கிறேன் )நன்றி நீங்கள் கால் பண்ணியதுக்கு

அசோக் : ஓகே.. சீக்கிரம் சந்திப்போம் ( கடவுளே அவ பார்க்குறதுக்கு ரொம்ப செக்ஸியாக இருக்கணும்... செக்ஸியாக இருக்கணும்...)

அமுதா : ஒகே பார்க்கலாம் ( என்னால் நம்ப மிடியவில்லை இவன் கால் பண்ணி பேசுவாணு....போன்ல பேசும் போது நல்லவனாகத் தெரிகிறான் .இப்போ போய் பின் வாங்க முடியாது. போய் மீட் பண்ணிதான் பார்ப்போம்.



அசோக் . அப்ப பார்க்கலாம். போய்வருகிறேன்( அவளுக்கு என்னை பிடித்து இருக்கிறது என நினக்கிறேன்....போன்ல கூட நமக்கு கவர திறமை இருக்கிறதுடா ராஜா)



--------

என்ன அமெரிக்காவில் பிறந்த நம் குழந்தைகளில் பெண் பார்க்கும் படலம் உங்களூக்கு பிடித்து இருக்கிறதா? பிடித்தால் பதில் எழுதுங்கள். நன்றி


ஹலோ ...ஹலோ..உங்களைத்தாங்க..என்னங்க இது வந்தீங்க படிச்சீங்க போறீங்களே ...கொஞ்சம் உங்க மனசுலப்பட்ட கருத்தைதான் சொல்லிட்டு போங்களேன் 

அன்புடன்
மதுரைத்தமிழன்




4 comments:

  1. சொந்த அனுபவமோ? ஹி ஹி ஹி, நல்லா எழுதி இருக்கீங்க.

    ReplyDelete
  2. இப்படித்தான் அ​மெரிக்காவுல ​​​பொண்ணு பாப்பாங்களா?
    அதனாலதான் நான் அங்​கெல்லாம் ​போகல......

    ReplyDelete
  3. சுவாரஸ்யமே இல்லாமல் போய்டும் போலே கடைசியில் கல்யாணம் கூட ...இன்னும் எங்க ஊரில் அந்த சுவாரஸ்யம் கெடலைன்னு நினைக்கிறேன்..

    ReplyDelete
  4. முகுந்த் அம்மா , அழகி, ஆனந்தி அனைவருக்கும் கமெண்ட் அளித்ததிற்கு நன்றி... எனக்கு பெண் பார்க்கும் படலம் என்ற அனுபவம் இல்லை, நோ ப்ரீ பஜ்ஜி சொஜ்ஜி,,,டான்ஸ், ஹூம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் இப்ப நான் தான் டான்ஸ் ஆடிக் கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.