உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, October 25, 2010

மெக்ஸிகன் காதல் கதை.

அழகு தேவதை மரியா ஜொஸேயை காதலித்து வந்தாள்.எவ்வளவு நாள்தான் காதலித்து கொண்டே இருப்பது, ஒரு நாள் கல்யாணம் செய்து கொள்வது என்ற முடிவோடு தன் அப்பாவிடம் தான் ஜொஸேயை காதலிப்பதாகவும் கல்யாணம் செய்து கொண்டால் அவனைத்தான் கல்யாணம் செய்து கொள்ளப் போவதாக சொன்னாள்.அதற்கு அவள் அப்பா, "மரியா, நீ வேறு ஒருவனை காதல் பண்ணி கல்யாணம் செய்து கொள், ஏனென்றால் அவன் என்னுடைய சின்ன வீட்டு பையன் ,உனக்கு சகோதரன் உறவு ஆகும் . இந்த விஷயம் அம்மாவிற்கு தெரிய வேண்டாம் என்று சொன்னார்.அப்பாவின் பேச்சை கேட்டு மரியாவும் ஜொஸேயை மறந்து விரைவில் ரிக்கார்டோவை காதலித்து அவனை கல்யாணம் செய்தது கொள்ளும் முடிவோடு தன் தகப்பனாரிடம் மீண்டும் சொன்னாள். அதற்கு அவள் தகப்பனார் மரியா மீண்டும் இந்த திருமணத்தில் பிரச்சனை இருக்கிறது. ரிக்கார்டோவும் ஜொஸேயைப் போல உனக்கு இன்னொரு சகோதரன் அவனையும் மறந்து விடு. இதையும் உன் அம்மாவிடம் சொல்லாதே என்று சொன்னார்.மரியாவோ அழுது கொண்டே அவளின் படுக்கையறைக்கு சென்றாள். இவர்களின் பேச்சை ரகசியமாக கேட்ட மரியாவின் தாய். மகளின் அறைக்கு சென்று... மகளின் தலையை கோதியவாறு ...மரியா உனக்கு ஜொஸே, ரிக்கார்டோ இவர்களில் யாரை உனக்கு அதிகம் பிடிதிருக்கிறதோ அவனை நீ கல்யாணம் செய்து கொள்.. ஏனென்றால் நீ யாரை அப்பா என்று நினைக்கிறாயோ அவர் உனக்கு அப்பா இல்லை. எனவே ஜொஸே அல்லது ரிக்கார்டோ உனக்கு சகோதரன் முறை கிடையாது என்று சொன்னார்.தமிழகத்தில் இந்த மாதிரி காதல் கதைகள் உண்மையாக வரும் நாள் வெகு தூரம் இல்லை. நான் சொல்வது சரிதானே????


இதைப் படிப்பவர்கள்....முடிந்தால் உங்களுக்கு நேரம் கிடைத்தால் பதில் எழுதுங்கள்.... நன்றி... வாழ்க வளமுடன்..

No comments :

Post a Comment

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog