Tuesday, October 26, 2010


ஒரு பெண் டாக்டரிடம் போய் சொன்னாள். டாக்டர் எனது பிரச்சனையை நீங்கள் தீர்க்க வேண்டும். உங்கள் ஒருவரால் மட்டும்தான் எனக்கு உதவ முடியும். என் முதல் குழந்தைக்கு ஒருவயது கூட முடியவில்லை. இப்போது நான் குழந்தை உண்டாகியிருக்கிறேன். குழந்தைகளுக்கு இடைவெளி அதிகம் இல்லை.



அதற்கு டாக்டர் கேட்டார்.. சொல்லும்மா நான் அதற்கு என்ன பண்ண வேண்டும். அதற்கு அவள் சொன்னாள். என்னால் இந்த இரண்டு குழந்தைகளையும் கவனிக்க முடியாது .உங்களைத்தான் மலைபோல நம்பியிருக்கின்றேன். நீங்கள்தான் எனக்கு அபார்ஷன் செய்வதற்கு உதவ வேண்டும் என்று கேட்டாள்.


டாக்டர் சிறிது நேரம் அமைதியாக இருந்து யோசித்துவிட்டு சொன்னார். நான் உனக்காக நல்ல தீர்வு ஒன்று யோசித்துள்ளேன். இது அதிகம் ஆபத்து குறைந்த ஐடியாவாகும் என்றார்.


அந்த பெண்ணோ மிகுந்த புன்னைகயுடன் தான் விரும்புவதை டாக்டர் நிறைவேற்றுவார் என்ற ஆவலோடு அவர் மேலும் சொல்லப்போவதை கூர்ந்து கவனித்தாள்



டாக்டர் தொடர்ந்து சொன்னார். உன்னால் ஒரே சமயத்தில் இரண்டு குழந்தைகளை பார்க்க முடியாததால் உன் கையில் உள்ள குழந்தையை கொன்று விடு...இதனால் அடுத்த குழந்தை பிறக்கும் வரை உனக்கு நிறைய ஒய்வூ கிடைக்கும். குழந்தையை கொல்வது என்ற முடிவு எடுத்த பிறகு எந்த குழந்தையை கொன்றால் என்ன? கையில் உள்ள குழந்தையை கொல்வதனால் உன் உடம்புக்கு எந்தவித ஆபத்துமில்லை.


அந்த பெண் சொன்னாள் நோ டாக்டர் ..இது பயங்கரமானது......கொடுமையானது. குழந்தையை கொல்வது க்ரைம். என்று கதறினாள்

டாக்டர் சொன்னார் நீ சொல்வதை முழுவது நான் ஒத்து கொள்கிறேன்.. ஆனால் நீ முதலில் சொன்னபோது உனக்கு இது ஒகே போல எனக்கு தோன்றியது & இது பெட்டர் ஐடியா என்று புன்முறுவலோடு சொன்னார்.

கடைசியில் பிறந்த குழந்தையையும் அல்லது பிறக்க போகும் குழந்தையையும் கொல்வது சரி சமமான் க்ரைம்தான் என்று அவளுக்கு டாக்டர் உணர்தினார்.


டாக்டர் சொன்னது சரிதானே...இதைப் படித்த உங்களுக்கு மாற்று கருத்து இருந்தால் கிழே பதிலிடுங்கள்.



Did you know that from day one, every unborn baby has its own unique DNA already mapped out? Therefore, what that baby will look like is already set….the color of their eyes, their height, etc.

Life begins at conception.

Check this out…

At just 3 weeks the baby’s eyes and spinal cord are visible and the brain begins to develop.

At 4 weeks, the heart is beating and the circulatory system is in place.

At 7 weeks muscles and nerves can work together.

At 9 weeks more than 90% of the body structures found in a full-grown human are present. All parts of the brain and spinal cord are formed. The heart pumps blood to every part of the body.

At 10 weeks the whole body of the unborn baby is sensitive to touch and can begin making facial expressions

9 comments:

  1. கருகலைப்பு செய்கிறவங்களுக்கு செருப்பில அடிக்கிறமாதிரி ஒரு பதிவு... வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. the info is good. but the pic of a crying women and blood nails are really scary. please remove these two pics. info is excellent and presentation is good s usual. i understand that like to put relevant pics. when the info is this scary, just info will do... and u can instead put a simple baby pic.. instead of this scary pic.

    ReplyDelete
  3. Dear anonymous, I purposely put those 2 pics. Because Who ever read this one. they have to take this message seriously not easily . I’m sure this pics touch deeply in their mind. Lots of scary pics I saw. But I filtered and selected this one. Anyway thanks for your comments. If you have time pls keep coming…and read and put your input…everyone have different views. I like to hear others views too. Thanks for coming

    ReplyDelete
  4. becuase of my reader request i removed one pic from this article.

    ReplyDelete
  5. //becuase of my reader request i removed one pic from this article.//

    im..good..

    ReplyDelete
  6. "ஆயிரம் வார்த்தைகள் உணர்த்தாததை ஒரு வலிமையான புகைப்படம் நமக்கு உணர்த்தும்"...அவ்வளவு தான் நான் சொல்ல வந்தது...

    ReplyDelete
  7. மிகவும் சென்டிமென்டா பார்பதாக தோன்றுகிறது. கொஞம் ப்ராக்டிகல்லா யோசித்தால் நல்லது

    ReplyDelete
  8. உண்மைதான் நண்பா... மனம் சற்று கலங்கி விழியோரங்களில் நீர் முட்டத்தான் செய்கிறது. எந்தக் குழந்தையாக இருப்பினும் அழித்தல் என்பதை என்னால் தாங்க இயலவில்லை. அந்த பாக்யத்திற்கு கொடுப்பினை இல்லாதவர்களுக்குததான் அதன் வலிகள் நன்கு புரியும்.

    ReplyDelete
  9. im sorry, im not agree with this. when they have problem in future will u able to help that family or that doctor is gonna help? they can decide do the need it or not. it is not sin. think about future as well. no life without sex. if something goes wrong there is no harm doing an abortion. I couldnt see anything wrong with that..

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.