உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Thursday, September 23, 2010

பெண்களை இப்படித்தான் திருத்த வேண்டும்.

நீண்ட கார் பயணத்திற்கு பின் நாங்கள் வீட்டிற்க்கு வந்து ட்டிரிங்ஸ் அடிக்கும் போது என் நண்பரின் மனைவி எங்களுக்காக ப்ரைடு எக் கிச்சனில் தாயாரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது என் நண்பர் திடிர் என கிச்சனில் நுழைந்து ஏய்ய்ய்ய் ஜாக்கிரதை! ஜாக்கிரதை! ஏய்ய்ய் இன்னும் கொஞ்சம் பட்டர் போடுடி! ஏய்ய்ய்ய் என்ன பண்னுர ஒரே சமயத்தில் மூணு . நாலு எக் போடதடி.. ஏய்ய்ய்ய் தீயைப் பாருடி.. சிறிது தீயைக் குறைடி ...கருகிறபோதுடி... பார்த்துடி... பார்த்து...பட்டர் போதுமாடி... இந்த நேரத்தில் எங்கடி போய் பட்டர் தேடுறதுடி......ஏய்ய்ய்ய் சட்டியில் ஒட்ட போதுடி,, நீ எங்க பார்த்து பண்ணுறடி.... பார்த்து பார்த்து ஜாக்கிரதை... ஓ மை காட்!!!!!!!!!நான் எத்தனை தடவை சொன்னாலும் நீ சமைக்கும் போது எப்போதும் காதில் வாங்கிறதுயில்லை.. ஆர் யூ க்ரேஸி? ஹவ் யூ லாஸ்ட் யுவர் மைண்ட்? ஓகே ஒகே!!!!!! உப்பு போட மறந்துடாத........நீ எப்பவுமே உப்பு போட மறந்துடுவ...ஏய்ய் பார்த்து போடுடி....பார்த்து..பார்த்து...........
அவரது மனைவி அவரைத் திரும்பி பார்த்து உங்களுக்கு என்ன ஆச்சு? ஏதாவது பைத்தியிம் கியித்தியம் பிடிச்சிருச்சா? ஒரு சாதாரணமான எக்கை எப்படி பொறிப்பதென்று பொண்ணாகிய எனக்கு தெரியாதா? எவ்வளவு நாளா சமைச்சிக்கிட்டு இருக்கிறன். போங்க. பேசம போய் உங்க வேலையை பாருங்க என்றார்.அதற்கு அவள் கணவன் மிகவும் அமைதியாக பதில் சொன்னார். கண்ணம்மா நான் கார் ஓட்டும் போது, நீ எனக்கு இன்ஸ்ரக்ட்ஷென் கொடுக்கும் போது, நான் எப்படி பீல் பண்ணுவேன் என்பதை உனக்கு உணர்த்த வேண்டுமென்றுதான் நான் கிச்சனுக்குள் வந்து இப்படி சொன்னேன். இப்போதாவது உனக்கு புரிஞ்சு இருக்குமென்று நினக்கின்றேன் என்று சொன்னார்.

1 comment :

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog