Friday, September 10, 2010

Beauty health tips
இந்த பிஸி உலகில் பெண்கள் வேலைக்கும் சென்று , வீட்டிலேயும் வேலை செய்து தாமதமாகத் தூங்கச் செல்வார்கள். ஒழுங்கான நேரத்திற்குத் தூங்கச் செல்லாதது உங்கள் தோலுக்கு அதிக கெடுதலை கொடுக்கும்.


உங்கள் முகம் பொலிவோடு இருக்க அதிகப் பணம், காலம் செலவழித்தும் அழகு நிலையத்துக்குச் சென்று வருவோம். ஆனால் நான் உங்களுக்கு அதிக செலவில்லாமல் உங்கள் முகம் கண்ணாடி போலப் பளபளக்க ஒரு எளிமையான ஆலோசனை தருகின்றேன்.

 

ஒரு தக்காளிப் பழத்தை எடுத்து ரொம்ப சின்னதாக ஸ்லைஷ் பண்ணி முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள்.

சிறிது நேரம் கழித்து ஒரு எலுமிச்சம் பழத்தை எடுத்து சாறு பிழிந்து அதனுடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து நன்றாகக் கலந்து முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். இருபது நிமிடம் அப்படியே காயவிடுங்கள் அதன் பிறகு நல்ல குளிர்ந்த தண்ணீரில் கழுவுங்கள்.



அதன் பிறகு உங்கள் முகம் கண்ணாடி போல பளபளனு இருப்பதை உணர்வீர்கள். காலையில் உங்கள் கணவர் உங்கள் அருகில் வந்தால் உங்களை முத்தமிட வருகிறார் என்று நினைக்காதீர்கள். கண்ணாடியைத் தொலைத்து விட்டு சேவிங் செய்ய கண்ணாடியில்லாததால்தான் உங்கள் அருகில் வருவார், காலை நேரத்தில் நமது ஆட்களுக்கு ரொமன்ஸ் மூடு ஏதுவும் வராதுங்கோ...

கடைசியாக ஆண்களுக்கும் ஒரு குறிப்பு. நீங்களும் இந்த குறிப்பை கடைப்பிடிக்கலாம்.அதன் பிறகு சிவாஜி படத்தில் வரும் ரஜினியைப் போல பளபளக்கலாம்.


அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. எலுமிச்சை சாறை எல்லாரும் உடனே apply பண்றது தவறு..ஏன் தெரியுமா? நம் எல்லாருக்கும் ஒரே மாதிரியான ஸ்கின் டைப் கிடையாது..சிலருக்கு ஆயில் டைப், சிலருக்கு dry டைப், சிலருக்கு complicated டைப்...சிலருக்கும் நார்மல் டைப்...சில complicated ஸ்கின் க்கு கட்டாயம் எலுமிச்சை (because it contains acitic acid..)சாறு ஒத்துக்காமல் allergy cause ஆக சான்ஸ் இருக்கு..நன்றி அருமையான தகவலுக்கு..தொகுப்பும் கூட சுவாரஸ்யம்..!!

    ReplyDelete
  2. இதெல்லாம் வேலைக்கு ஆகாது .... ஒரே நாளில் சிவப்பழகு கிடைக்க என்னிடம் ஒரு ஐடியா இருக்கு.... மருதாணியை அரைத்து முகம் முழுக்க பூசி ஒருநாள் வைத்து அதன்பின் குளிக்க அடுத்த நாளே முகம் சிவப்பழகில் மின்னும்..
    https://www.scientificjudgment.com/

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.