உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, September 8, 2010

தங்கமான சங்கங்கள்

உன் பெயரைக்கூட நான் எழுதுவதில்லை..
ஏன் தெரியுமா?
"பேனா" முனை உன்னை குத்திவிடுமோ என்று..இப்படிக்கு
ஸ்பெல்லிங்க(Spelling) தெரியாமல் சமாளிப்போர் சங்கம்

அவள் என்னை திரும்பி பார்த்தாள்..
நானும் அவளைப் பார்த்தேன்..
அவள்..மறுமடியும் என்னைப் பார்த்தாள்
நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்..இப்படிக்கு
பரிட்சையில் ஒன்னுமே தெரியாமல் திருதிரு வென முழிப்போர் சங்கம்
காதல் ஒன் சைடாக பண்ணினாலும்
இரண்டு சைடாக பண்ணினாலும்
கடைசியா சுசைடு (Suicide)- தான் பண்ணக்கூடாது


இப்படிக்கு
காதல் பற்றி Four Side-ம் யோசிப்போர் சங்கம்


அனுமதி கேட்க்கவும் இல்லை...
அனுமதி வழங்கவும் இல்லை...
ஆனால்
பிடிவாதமாக ஒரு முத்தம்..
"கன்னத்தில் கொசுக்கடி"


இப்படிக்கு
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்புலிக்கு பின்னாடி போன மானும்
பொண்ணுக்கு பின்னாடிப் போன ஆணும்..
பிழைத்ததாக சரித்திரம் இல்லை..


இப்படிக்கு
சிங்கிளா வாழ்ந்தாலும்
சிங்கம் போல வாழ்வோர் சங்கம்...[படித்ததும்...மறந்துவிடவும்]கிரிக்கெட்டில் ரன் எடுக்காமல் போனால் டக் அவுட்
ரயிலில் டிக்கெட் எடுக்காமல் போனால் வித் அவுட்
வீட்டில் கொசுவை கொல்லுவதற்கு ஆல் அவுட்
நீங்க இந்த வலைப்பதிவை அப்ரூவ் பண்ணலைன்னா ( கமெண்ட்ஸ் போடலென்னா)
நான் மூடு அவுட்


இப்படிக்கு
பாசக்கார பய புள்ளை சங்கம்


குறிப்பு. இது என் நண்பர் எனக்கு அனுப்பியது.

2 comments :

  1. என்னுடைய வருத்தமான பிரச்னை நேரத்திலும் புன்னகைக்க வைத்தமைக்கு நன்றி...

    ReplyDelete
  2. இந்த எஸ்எம்எஸ் எல்லாம் நான் முன்னாடியே எனக்கு வந்து படிச்சுருக்கேன்..பட் இது எத்தனை வாட்டி படிச்சாலும் படிக்கலாம்..நகைச்சுவையில் தமிழ் மொழியில் அடிச்சுக்க எதுவும் கிடையாது...நன்றி..!

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog