Thursday, September 2, 2010

அமெரிக்கன் நாசாவில் இருந்து விண்வெளிக்கு முதன் முதலில் விஞ்ஞானிகளை அனுப்பும் போது அவர்கள் எழுதுவதற்குப் பேனாக்களைக் கொடுத்து அனுப்பினார்கள்.

விண்வெளிக்குப் போன பின் தான் விண்வெளியின் ஜீரோ க்ராவிட்டியில் இந்த பேனாக்கள் எழுதுவதற்குப் பயனில்லை என்று கண்டுபிடித்தார்கள்.

அதன் பிறகு பல விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாக 12 ஆயிரம் மில்லியன் டாலர் பணம் செலவழித்து ஒரு புதிய பென் ஒன்றைக் கண்டுபிடித்தார்கள். அது விண்வெளியில் உட்கார்ந்து எப்படி எழுதினாலும் ஏதன் மேலும் வைத்து எழுதினாலும் எழுதக்கூடியது.

இதைப் பற்றி மதுரையில் உள்ள நண்பரிடம் ஒரு டீக்கடையில் வைத்துப் பேசிக் கொண்டிருந்த போது பக்கத்தில் உள்ள படிக்காத ஒரு வயதான ஆள் சொன்னார். அமெரிக்கன் எல்லாம் புத்தியில்லாதவன் எதற்கு இவ்வளவு பணம் செலவலிக்கனும் பேசாமல் ஓர் பென்சில் எடுத்துப் போயிருக்கலாமே என்று ஒரு போடு போட்டாரே பாருங்கள்.

அன்புடன்
மதுரைத்தமிழன்

2 comments:

  1. என்னக் கொடுமை..... சுகி சிவம் ஒரு நிகழ்ச்சியில் இந்த அமெரிக்க பேனா மற்றும் ரஷ்ய பென்சில் குறித்து 4 ஆண்டுக்கு முன்பே சன் டிவியில் இந்த நாள் இனிய நாளில் சொன்னாரே.

    ReplyDelete
  2. இது எனக்கு அமெரிக்க நண்பர் அனுப்பிய ஜோக் அதை நான் தமிழில் மாற்றி எனது வழியில் தந்துள்ளேன். அவ்வளவுதான் நான் செய்தது. எனக்கு நதி மூலம் தெரியாது. பின்னூட்டம் அளித்த திரு.கண்ணண் அவர்களுக்கு நன்றி.

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.