உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Monday, August 16, 2010

உனக்கு மட்டும் இலவசம்.

எனது மனைவி அமெரிக்கா வந்த நேரத்தில் நடந்த சம்பவம் இது. ஒரு நாள் என் மனைவியின் ஆபிஸில், அவள் குருப்பில் உள்ள அனைவரும் "லஞ் அவுட்" போவது என முடிவு செய்து ஒரு ரெஸ்டரண்டிற்கு சென்றனர். அவள் குருப்பில் அநேக பேர் அமெரிக்கர்கள் சில இந்தியர்களும் உள்ளனர். அதில் என் மனைவிமட்டும் சைவம் மற்ற அனைவரும் அசைவம். எல்லோரும் அவரவர்களுக்கு தேவையானதை ஆர்டர் செய்தார்கள், என் மனைவியின் டைம் வந்த போது அவள் ப்ளையின் ரைஸும் சில வெஜிடபுளும் ஆர்டர் செய்தாள். அந்த மாநிலத்தில்( மிச்சிகன் ) உள்ளவர்களுக்கு நம் நாட்டின் வெஜிடேரியன் கான்ஸ்ப்ட் புரியாதது. எனவே எப்போதும் உணவு ஆர்டர் பண்ணும் போது நோ எக், நோ சிக்கன், நோ மீட், நோ ஃபிஷ் என்று சொல்ல வேண்டும் இல்லையென்றால் எதையாவது போட்டு எடுத்து வந்து விடுவார்கள் . ப்யூர் வெஜிடேரியன் என்றால் அட்லிஸ்ட் நியுயார்க்கில் உள்ளவர்களோ கொஞ்சம் புரிந்து கொள்வார்கள். இங்கு உள்ளவர்களுக்கோ எல்லாம் நோ சொல்ல வேண்டும்.எல்லோருக்கும் நல்ல பசி உணவுக்காக காத்திருந்தனர். முக்கால் மணி நேரம் கழித்து உணவு வந்தது. என் மனைவிக்கு பறிமாறும் போது ரைஸுக்கு மேல் ஒரு பெரிய சிக்கன் வைத்து இருந்தார்கள். என் மனைவியோ சர்வரிடம் நான் ரைஸும் வெஜிடபுளும்தான் ஆர்டர் பண்ணினேன் நீ தவறாக நான் வேறு யாருக்கோ உள்ளதை தவறாக எடுத்து வந்து விட்டாய் என்று கேட்டாள். அதற்கு அந்த சர்வரோ மிகுந்த புன்னகையுடன் உங்களுக்காக நாந்தான் எக்ஸ்ட்ரா சிக்கன் வைத்துளேன் இது என்னுடைய காம்பிளிமெண்ட் என்று சொன்னார். எனது மனைவியும் மற்றவர்களும் பசியின் மயக்கதில் அந்த சர்வரை சத்தம் போட்டனர். அந்த சத்தத்தை கேட்ட மேனேஜர் உடனே விரைந்து வந்து விசாரித்தபோதுதான் புரிந்தது அந்த சர்வர் என் மனைவியிடம் பணம் அதிக அளவில் இல்லையென்று எண்ணி இரக்கப் பட்டுதான் அந்த சிக்கனை இலவசமாக கொடுத்துள்ளார் என்று எல்லோருக்கும் புரிய வந்தது. எல்லோரும் சிரித்தபடி பணம் இங்கு மேட்டர் அல்ல மத வழக்கப்படி இந்த பெண் சைவம் மட்டும்தான் சாப்பிடும் என்று விளக்கினர். கடைசியில் என் மனைவி ஒரு குக்கியையுன் தண்ணிரையும் மட்டும் குடித்து விட்டு வந்தார். இந்த மிஸ் அண்டர்ஸடண்டிர்க்காக மொத்த பில் தொகையில் 25 சதவிகிதம் தள்ளுபடி கொடுத்துவிட்டார். என் மனைவியைத் தவிர எல்லோருக்கும் மிகுந்த கொண்டாடம். இங்கு எல்லோரும் குருப்பாக போனாலும் அவரவர் சாப்பிட்டதுக்கு அவரவர்தான் பணம் கொடுப்பார்கள். நாம் இந்தியர்கள் மட்டும் தனி குருப்பாக போனால் எல்லோரும் பணம் நாந்தான் நாந்தான் கொடுப்பேன் என்று சண்டைப் போடுவார்கள் இந்த பழக்கத்தை அமெரிக்கரிடம் எதிர்பார்க்க முடியாது.

1 comment :

  1. பாவம் உங்கள் மனைவி...சரி ஏதாவது குகீஸ் ஆவது சாப்டாங்களே..அண்ணி க்கு வாழ்த்துக்கள்..:)))

    ReplyDelete

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog