உங்களின் பொழுது போக்கிற்கு உத்தரவாதம் தரும் ஒரு வலைத்தளம் அவர்கள்...உண்மைகள்.

Wednesday, July 21, 2010

ஆனந்தம்.நாம குழந்தையாக இருக்கும்போது நாம் பெரியவானாக வளர்ந்துவிட்டால் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். பெரியவனாகிவிட்டால், வேலைக்கிடைத்துவிட்டால் நம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். வேலைக்கிடைத்துவிட்ட பிறகு நல்ல மனைவிகிடைத்தால் நம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். நல்லமனைவி கிடைத்த பிறகு குழந்தையிருந்தால் நம் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். குழந்தை பிறந்த சிறிதுகாலத்திற்கு பிறகு அந்த குழந்தை வளர்ந்துவிட்ட பிறகு வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். அதன் பிறகு அந்த குழந்தை டீன் ஏஜ் பருவத்தை தாண்டிவிட்டால் கவலையில்லாமல் வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம். அந்த குழந்தைக்கும் கல்யாணமாகி நாமும் ரிட்டையர்டுயாகி நாம் பேரக்குழந்தைகளுடன் விளையாடும் போது வாழ்க்கை ரொம்ப சந்தோஷமாக இருக்கும் என்று நினைப்போம்.ஆனால் வாழ்வின் உண்மையென்னவென்றால் இந்த நிமிஷத்தைவிட வாழ்வில் வரப்போகும் நிமிஷம் சந்தோஷமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. இப்போதுயில்லையென்றால் பின் எப்போது?நம் வாழ்வில் எப்போழுதும் சாவால்கள் நிறைந்துள்ளன. நாம் அதைப் புரிந்து ஒத்துக்கொண்டு சந்தோஷமாக வாழக் கற்றுகொள்ள வேண்டும்.வாழ்க்கை இப்போதுதான் சந்தோசஷமாக ஆரம்பிக்கிறது என்று நாம் நினைக்கும் போது உடனே தடைக்கல் எதிர்படும். அந்த தடைக்கல்லையும் ஒரு படிக்கல்லாகமாற்றி வெல்ல வேண்டும். நிமிஷங்கள் தங்கப்புதையல் மாதிரி . அதன் முக்கியத்துவதை உணர்ந்து அதை நம் வாழ்வில் யாரை முக்கியமாக கருதுகின்றோமோ அவர்களுடன் பகிர்ந்து சந்தோஷமாக இருக்க வேண்டும். நிமிடம் யாருக்காகவும் காத்திருக்காது அதை புரிந்துக்கொள்ள வேண்டும்.படித்து முடிக்கும்வரை , உடல் எடையை குறைக்கும்வரை, அல்லது கூட்டும் வரை, வேலைக் கிடைக்கும்வரை, கல்யாணம்மாகுவரை, பிள்ளை பெற்கும்வரை, கார் வாங்கும்வரை, வீடுவாங்கும்வரை, இல்லை விஜயகாந்த் தமிழகத்தின் முதலைமச்சராகும் வரை, அம்மா ஜெ பிரதமராகும்வரை,கலைஞ்யர் வெள்ளை மாளிகையை விலைக்கு வாங்கும் வரை, ரஜனிகாந்த் அரசியலுக்கு வரும்வரை, ராமதாஸ் தனித்து தேர்தலில் நிற்கும்வரை ,விஜய் படம் பத்து நாள் சூப்பர் கிட்டாக ஒடும்வரைக்கும் காத்திருப்பதை இப்போதே நிறுத்தி ! இந்த நிமிஷத்தைவிட வேற எந்த நிமிஷமும் நாம் சந்தோஷமாக இருக்க முடியாது என்று நினைத்து வாழுங்கள்.சந்தோஷம் என்பது ஒரு பயணம். அதற்கு ஒரு முடிவு என்பது கிடையாது. எனவே யாரும் பார்க்காத போது எப்படி ஆடி பாடுவிர்களோ அப்படி ஆடிப்பாடி சந்தோஷமாக இருங்கள்.டிஸ்கி: : நான் தமிழில் எழுதி 12 வருடங்களுக்கு மேலாகிறது. எனவே எனது எழுத்தில் தவறுகள் இருந்தால் மன்னிக்கவும். வலைப்பக்கத்தை ஆரம்பத்துவிட்டதால் எதையாவது எழுத வேண்டுமென்று எழுதுகின்றேன். இது எனது புதிய பொழுது போக்கு.......பிடித்து இருந்தால் பதில் எழுதுங்கள்.

No comments :

Post a Comment

உங்க மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான, வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டாலும் அது வெளியிடப் படமாட்டது. இந்த கமெண்ட்ஸ் காலத்தை திறந்து வைத்திருப்பதன் காரணம் பல்வேறு மக்களின் கருத்துக்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தினால் மட்டுமே. சில நேரங்களில் நான் சொல்லும் கருத்துகள் தவறாக கூட இருக்கலாம் அதை தெரிந்து மாற்றிக் கொள்ளலாம். நான் மதங்களை அல்ல கடவுள் என்ற ஒரு சக்தி உண்டு என்பதை நம்புவன். அதனால் மதக் கருத்துகளுக்கு இங்கு இடமில்லை. மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறேன். நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.

Download templates

www.gnanalaya-tamil.com

Gadgets By Spice Up Your Blog